மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது.
இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் (அமல்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடியில் இயங்கும் வேல்ஸ் சினிமா பட்டறையினால் நடத் தப்பட்ட குறுந்திரைப்பட விருது வழங்கல் விழாவும், பாலு மகேந்திரா திரைப்பட விழாவும் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியா ழேந்திரன் மேலும் தெரிவிக் கையில்,
இந்நாட்டில் பேரினவா தத்தை வளர்ப்பதற்கு முற்பட்ட அரசுகள் கடந்த காலங்களில் மக்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களே இடம்பெற்றுள் ளன. இன்று தமிழ் மக்களின் குரலாக மூச்சாக செயற்படு கின்ற அங்கீகாரம் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம்போனவர்களல்லர்.
வடக்கு, கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயகப் பிரதேசமாகும். இப்பிரதேசங்களை சூறையாடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது. அடக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதிகளாகவே நாமுள்ளோம். கல்வி, பொருளாதாரம், கலை ஆற்றலை இழந் துள்ளோம்.
நாம் இங்கு அடிபட்டால் எமக்காக துடிக்கின்றவர்கள் தமிழ் நாட்டு உறவுகளாகும். அவ்வுறவுகளின் உணர்வுக ளுக்கு மதிப்பளிக்கின்றோம்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமி ழர்களை கொன்று குவித்தது. அதற்கு தமிழ் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்நல்லாட்சி யிலாவது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையிலே நாம் இருக்கின்றோம்.
சிறுபான்மை மக்களின் தயவில் ஆட்சி பீடம் ஏறியுள்ள இந்நல் லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி ராவணபலய என்ற பேரினவாத அமைப்பை சந்திப் பதற்கு நேரம் கொடுத்துள்ளார்.
தமிழ் மக்களையும் அவர்களது கிராமங்களையும் பெயர்களையும் சிங்களமாக மாற்றுவோம் என சூளுரைத் துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அவர்களை சந்திப்பது பாரதூரமான விடயமாகும்.
பொதுபலசேனா, ராவணபலய என்ற பாம்புகளை அழித்தொழிக்க வேண்டும். இவ்வாறான பேரினவாத கட்சிகளினா லேயே சிறு பிரச்சினை கூட பூதாகரமாக உருவெடுக்கின்றது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும். ராவணபலய அமைப்பை இவ் அரசு அரவணைக்க முற்பட்டால் மஹிந்த அரசுக்கு ஏற்பட்ட கதியே இதற்கும் ஏற்படும்.