பதவி விலகிய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை!– திலக் மாரப்பன

பதவி விலகிய போதிலும் அவன்ட் கார்ட் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சட்டவிரோதமானது எனக் கூறப்படும் ஆயுதங்களை கடற்படையினரிடம் ஒப்படைக்க முடியுமா என்ற சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதன் ஊடாக நான் பதவியிழந்தது மட்டுமே நடைபெற்றுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மாத்திரத்தில் பிணக்குகளுக்கு தீர்வு கிட்டாது.

அவன்ட் கார்ட் சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பகைமையின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டு வருகின்றனர் என நாடாளுமன்ற திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.