ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு எவருடனும் ஒப்பந்தங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை, அவர் எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்களை வைத்துள்ளார் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் எந்தவிதமான அரசியல் ஒப்பந்தங்களும் இல்லை. அவர் ஜனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவே செயற்பட்டு வருகின்றார். அதன் மூலமாகவே 19 ஆவது சீர்திருத்த சட்டத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தினை குறைத்துள்ளார். புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல், சகவாழ்வினை ஏற்படுத்தல் ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் வடக்கிற்கும் செல்கின்றார், தெற்கிற்கும் செல்கின்றார். அதுவே அவரது நல்லிணக்க செயற்பாடுக்கு அடிப்படை. கட்சியை பிளவுபடுத்தும் தலைவர் மைத்திரிபால சிறிசேன அல்ல. இனிவரும் கட்சியை பிளவுபடுத்த போவதும் இல்லை. அவர் ஒரு தூய்மையான தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.