மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் காணியில் கடும் தேடுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமான காணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் உள்ள காணியொன்றே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

STF பலத்த பாதுகாப்பில் பெகோ இயந்திரம் கொண்டு குறித்த இடமானது தோண்டப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவுடனேயே இத்தேடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.