Breaking
Fri. Nov 1st, 2024

கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து நியாயம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும்.

அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுதிப்படுத்தக் கூடிய அனைத்து தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும்.

இவ்வனைத்துத் தகவல்களும் 2016 ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் திரு.எஸ்.ரி.கொடிகார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.

By

Related Post