பாரவூர்தி இறுகியதில் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள்தெரிவித்தார்.

மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.