ஓகஸ்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என, தெரிவிக்கப்படுகிறது.