இன்று உகண்டா நோக்கி பயணமாகியுள்ள மஹிந்த ராஜபக்ச!

பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார்.

உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா முசெவெனி 6வது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு இதில் கலந்து கொள்ள மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மஹிந்த அங்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த, தனசிறி அமரதுங்க உள்ளிட்டோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.