கராத்தே வீரர் வசந்த செய்சா கொலையின் 27 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை

கராத்தே வீரர் வசந்த செய்சாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 27 சந்தேகநபர்களையும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதவான் மஞ்சுலா திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, பிரதான சந்தேகநபரை தவிர ஏனையவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 10,000 ரொக்க பிணையிலும், ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் 27 சந்தேகநபர்களும், அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் வேறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.