மஹிந்தவுக்கு மேர்வின் சில்வா விதிக்கும் நிபந்தனை!

தவறு செய்த சகோதரர்களை கைவிடுவதாயின் தான் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை ராஜபக்ச குடும்பத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்ட அவர், களனியில் பிரச்சினைகளை தோற்றுவித்தது பசில் ராஜபக்ச எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்னும் பல விடையங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்த மேர்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தொடர்பில் தான் இன்னும் அமைதிக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.