Breaking
Fri. Dec 5th, 2025

இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145.

இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார். ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் தட்டிச்செல்கிறார்.

உலகளவில் பிரான்சை சேர்ந்த ஜென்னி கால்மென்ட்தான் வயதான நபர் என கூறப்பட்டு வந்தது. இவருக்கு வயது 122.

மபஹ், தனது 10 உடன்பிறப்புகள், 4 மனைவிகள், அவரது குழந்தைகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் மரணம் அடைந்து விட்டனர். பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக்குழந்தைகள் மட்டுமே வாழ்கிறார்கள்.

இவர் தற்போது மரணம் அடைய விரும்புகிறார். தனது கல்லறைக்கு தேவையான தளவாட பொருட்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்து விட்டார்.

தற்போது பலவீனமாக உள்ள மபஹ், பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே இருப்பதாகவும், வானொலி கேட்பதாகவும் அவரது பேரக்குழந்தைகள் கூறுகின்றனர்.

எல்லாவற்றிலும் பொறுமையைக் கடைப்பிடித்துத்தான் இத்தனை நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

By

Related Post