Breaking
Fri. Dec 5th, 2025

இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 26ஆம் தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியில் நேற்று பங்கேற்ற போது ஊடகவியலாளாகளிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலை சர்வதேச அளவில் விரிவு படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலை உலக அளவில் பிரச்சாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post