Breaking
Fri. Dec 5th, 2025

ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், நாலந்த உடுதேனிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 24 வயதான இருவர் பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம்; நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தற்போது சடலம் நாலந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post