Breaking
Sat. Dec 6th, 2025

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவி்ல்லை. இது நான் எதிர்பார்த்தது தான்.

காலையில் எனது ரிவிட்டர் வலைத்தளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனினும், இந்த விவகாரத்தில் நீதிபதி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

கர்நாடக நீதிமன்றம் மிக சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கருதுகிறேன்  என்று கூறியுள்ளார்.

Related Post