சிராஸ் மீராசாஹிப் (லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக) இன்று பதவியேற்பு

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை இன்று (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்பு – 02, கொம்பனித் தொரு, சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.