Breaking
Sat. Dec 6th, 2025

2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவுசெய் யப்பட்ட அமைச்சர்களுக்கு ஒதுக் கப்பட்ட நிதித்தொகை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபை முதல் வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா தலைமையில் 20 பேர் கொண்ட நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளது என பிரதியமைச்சர் சந்திர வீரக்கொடி நேற்று சபை யில் அறிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை ஒரு மணிக்கு கூறியது. இதன்போது சபாநாயகரின் அநிவிப்பை விடுக்கும் வேளையிலேயே பிரதிசபாநாயகர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி குழுவில் சபாநாயகரால் பெயரிடப்பட்டவர்களின் விபரம் வருமாறு,
அமைச்சர்களான டபிள்யூ.டீ.ஜே. செனவிரட்ன, சரத் அமுனுகம, தினேஷ், அதாவுத செனவிரட்ன, மஹிந்த சமரசிங்க, பிரதிமைச்சர்களான முத்து சிவலிங்கம், லசந்த அழகிய வன்ன, எம்.பிக்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, சுனில் ஹந்துன் நெத்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா, ஆர்.யோகராஜன், ரா.அகிலவிராஜ் காரியவசம், சில்வெஸ்டர் எலன்டின், ஹர்­ டி சில்வா, சுதர்´னி பெர்னாண்டோ பிள்ளை, ஜனக பண்டார, ரோஸி சேனநாயக்க, ஹுனைஷ் பாரூக் ஆகியோர் சபாநாயகரால் பெயரிடப்பட்டுள்ளனர் என பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.(s)

Related Post