Breaking
Sat. Dec 6th, 2025
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க போவதாக பொது வேட்பளார் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நியாயத்தை நிறைவேற்ற போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் பிரதம நீதியரசரும், முன்னாள் இராணுவத் தளபதியும் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருக்கு நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related Post