Breaking
Fri. Dec 5th, 2025
மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .

அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை.

மறுபுறம் எனக்கு வாக்களிக்காத 48 லட்சம் பேருக்கும் நான் துரோகம் இழைக்கவில்லை. ஆனால் மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவே என்மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளித்திருக்கிறார்கள்.

ஜே.வி.பி பந்தை அழகாக வீசுகின்றது, அரசாங்கம் அதனை உயர்த்தி 6 ஓட்டங்கள் பெறும் வகையில் அடிக்கின்றது.

குமார் சங்கக்காரவை விடவும் அரசாங்கம் திறப்பாக விளையாடுகிறது என்றார்.

By

Related Post